இலங்கை பிரதான செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார் – கருணாசேன ஹெட்டியாராச்சி

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்கும்  சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் தமக்குள்ள ஆட்சேபனைகள் குறித்து  15 பக்கங்களடங்கிய  ஆவணத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அதற்கு விரைவில் பதில் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும்  கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *