இலங்கை பிரதான செய்திகள்

கடல் நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தால் மீன் வளம் அதிகரிக்கும். – கலாநிதி கே.அருளானந்தனம்

கடல் நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தால் மீன் வளங்கள் அதிகரிக்குமே தவிர மீன் வளங்கள் அழியாது என இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடி ஆய்வுபிரிவான நராவின் தலைமை அதிகாரி கலாநிதி கே.அருளானந்தனம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில் ,

வடமராட்சி, மருதங்கேணி தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு மீனவர்களிற்கு எந்தவிதமான பாதகங்களும் ஏற்படாது.   மீனவர்களிடையே குறித்த திட்டம் தொடர்பாக உள்ள சந்தேகம் தொடர்பில் கடந்த ஒருவருட காலமாக நடந்த ஆய்வுகளின்; பெறுபேறுகளில் இருந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களிடையே எழுந்த சந்தேகங்கள் தொடர்பில் கடந்த ஒருவருட காலமாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக பக்கத்தை கொண்டது.இது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு மீனவர்களிற்கு எந்தவிதமான பாதகங்களும் ஏற்படாதென தெளிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

இது பற்றி விளக்கமளிக்ககூட அனுமதியாது நேற்றைய மாவட்ட செயலக கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மீன்பிடி விசேட முறைகள் இதனால் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் மேற்குறித்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திரிபுபடுத்தி கருத்து தெரிவிக்கபட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக மேலும் தெவித்தார்.

அதேவேளை மீன்பிடி தொழிலை இத்திட்டம் பாதிக்கும் என்ற தீர்மானத்துக்கு வரக்கூடியதாக உள்ளதாக தெரிவித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *