இந்தியா பிரதான செய்திகள்

திருப்பதி அருகே இடம்பெற்ற வாகன மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


திருப்பதி அருகே கடைகளுக்குள் லொறி ஒன்று  மோதியதில்  பேரூந்துக்காக  காத்திருந்த   கொல்லப்பட்டுள்ளனர். அதிவேகமாக சென்ற லொறி,   சாரதியின்  கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக சென்று பேரூந்து நிறுத்தத்தில் பேரூந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தின் எதிரே ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளதாகவும்  அந்த போராட்டக்காரர்கள் மீதும் லொறி மோதியுள்ளது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின் வயர்கள்  அறுந்தமையினால்  மின்சாரம் தாக்கியும் சிலர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் சுமார் 20 பேர் வரையில் படு காயமடைந்துள்ள நிலையில் அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *