விளையாட்டு

லசித் மாலிங்க மீளவும் ஒருநாள் அணியில் இடம்பெறக்கூடிய சாத்தியம்


இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீளவும் ஒருநாள் சர்வதேச அணியில் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் எதிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரில் மாலிங்க பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடருக்கான இலங்கை அணியை அன்ஜலோ மெத்யூஸ் வழிநடத்த உள்ளார். அணியின் உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *