இந்தியா

நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார்.

பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த அவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று; மரணம் அடைந்துள்ளார்.

1945 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2007ல் வெளிவந்த முனி திரைப்படம் அவரின் ஆயிரமாவது படமாகும். இறுதியாக 2014ல் வெளிவந்த வாயை மூடி பேசவும் படத்தில் நடித்திருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *