இந்தியா பிரதான செய்திகள்

ஜெயலலிதாவின கொடநாடு பங்களா காவலாளியின் கொலை தொடர்பில் ஒருவர் கைது:-

தமிழக முன்னாள முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளியை கொலை செய்தமை தொடர்பில் கேரளாவில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பங்களாவில் காவலாளியாக கடமையாற்றிய ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டதுடன மற்றொரு காவலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொலை குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

குhயமடைந்த காவலாளியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் அறைகளுக்கு கொலையாளிகள் சென்றுள்ளனர் என்பதுடன் அவர்கள் பொருட்கள் எதனையும் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதனையும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் கொலையாளி ஒருவரை கேரளாவில் தனிப்படைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கொடநாடு அழைத்து வரப்படுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *