உலகம் பிரதான செய்திகள்

மாசிடோனிய நாடாளுமன்ற தாக்குதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட 77 பேர் காயம்:-

மாசிடோனியோவில் பாராளுளுமன்றத்துக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட 77 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசிடோனியாவின் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் மாசிடோனியர்களாகவும் 25 சதவீதமானோhர் அல்பேனியர்களாகவும் உள்ள நிலையில் அங்கு மாசிடோனியா புரட்சிகர கட்சியும் ஐக்கிய மாசிடோனியா ஜனநாயக கட்சியும் இணைந்து சுமார் 10 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்தின.

இந்தநிலையில் கடந்த டிசம்பரில் அங்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மாசிடோனியாவில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று மாசிடோனியர்களும் அல்பேனியர்களும் தனித்தனியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த வியாழக்கிழமை மாசிடோனியா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அல்பேனிய இனத்தைச் சேர்ந்த ஹாபெரி என்பவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாசிடோனியா இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட 77 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேநிலை நீடித்தால் இனப் பிரச்சினை காரணமாக மாசிடோனியா இரண்டாக உடையக்கூடும் என்று அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *