இலங்கை

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கும் – அரசாங்கம்


ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இந்த வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கும் என் நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் கபீர் ஹாசீம் இந்த வரிச் சலுகைத் திட்டம் கிடைப்பது இலங்கைக்கு பெரு வெற்றியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்த வாக்கெடுப்பின் போது எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக வெறும் 119 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *