இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 2 – நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது:-


டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட குழு ஒன்று கூட்டாக பலாத்காரம் செய்த பின்னர் நிர்பயாவை ஓடும் பேருந்தில் இருந்து  தூக்கி வெளியே வீசியது.

இது தொடர்பாக 18 வயது சிறுவன் உட்பட 6 பேரை பொலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.  இளம்குற்றவாளி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். எஞ்சிய 4 பேருக்கும் கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்தத் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய  குழு இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என கூறி 4 பேருக்குமான தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

நிர்பயா பலாத்கார வழக்கு  –   மரண தண்டனைக் கைதிகளின் தீர்ப்பு இன்று:-

May 5, 2017 @ 03:14

இந்தியாவையே  உலுக்கிய நிர்பயா பலாத்கார சம்பவம் தொடர்பில்  மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு தெமாடர்பில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஜோதிசிங் (நிர்பயா) என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேரூந்தில்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன் கொடூரமாக தாக்கப்பட்டுமிருந்தார். இதனையடுத்து  சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோதிசிங் சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில்  6 பேர் கைது செய்யப்பட்டதுடன்  அதில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்  அவர்களில் ஒருவரான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.  மேலும் இளங்குற்றவாளி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர்  சிறைத் தண்டனை சட்டப்படி முடிந்து  வெளியேறிவிட்டார்.

மீதமுள்ள 4 பேருக்கான  மரண தண்டனையை  டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்த நிலையில்  இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தநிலையில், தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க்கபடுகின்றது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *