இந்தியா பிரதான செய்திகள்

மணிப்பூரில் கண்ணி வெடி தாக்குதல் – ராணுவத்தினர் பலி:-


மணிப்பூரில் கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன்மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவீரர்கள் ரோந்து பணிக்காக ராணுவ வாகனங்களில் சென்றுகொண்டிருந்த வேளையில் தீவிவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணி வெடி தாக்குதலை தொடர்ந்து அங்கு தீவிரவாதிகளை தேடி தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் ராணுவ வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஒன்றிணைந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள காடுகளில் தீவிரமாக தேடிவருகின்றனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *