இலங்கை முஸ்லீம்கள்

13ம் திகதி ஜனாதிபதி வழங்கவுள்ள பதில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் விடிவாக அமைய வேண்டும் – காதர் மஸ்தான்

எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ள சாதகமான பதில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு விடிவாக அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் சார்பில் சிலர் ஜனாதிபதியை சந்தித்ததன் விளைவாக எதிர்வரும் 13ம் திகதி சாதகமான பதிலொன்றை தருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அப்போராட்டத்தை கைவிடுமாறும் கூறியிருந்தார்.

அதனடிப்படையில் எதிர்வரக்கூடிய 13ம் திகதி மறிச்சுக்கட்டி மக்களின் விடியலுக்கான நாளாக இருக்க வேண்டும் என்பதுடன்,  மீண்டும் தமது சொந்த நிலத்தில் அந்த மக்கள்  சுதந்திரமாக வாழ ஜனாதிபதி வழிசமைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும்.

அத்துடன் சிறுபான்மை மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை பலப்படுத்த கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக  ஜனாதிபதி பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானினால்  ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *