இலங்கை பிரதான செய்திகள்

சர்வதேச வெசாக் தினத்தில் இலங்கையின் பங்களிப்பு குறித்து ஐ.நா பாராட்டு


சர்வதே வெசாக் தினத்தில் இலங்கையில் பங்களிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டை வெளியிட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பு மிக்கவை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோலி (Una McCauley  )தெரிவித்துள்ளார். மனித உரிமைகள், நல்லாட்சி, மரியாதை  அளித்தல் போன்ற பல்வேறு நல்ல விடயங்களை பௌத்தம் போதிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை வெசாக் தின நிகழ்வுகள் ‘சமூக நீதி மற்றும் நீடித்து நிலைக்கும் சமாதானம்’ என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *