இலங்கை பிரதான செய்திகள்

தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் கனடாவில் மேன்முறையீடு


தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் ஒருவர் கனடாவில் மேன்முறையீடு செய்துள்ளார். தம்மை நாடு கடத்த முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்குமாறும் கோரி கனேடிய உச்ச நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாக்ஸி சாரதியான நிஸ்ரின் அகமட் மொகமட் நிலாம்  (  Nisreen Ahamed Mohamed Nilam ) என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து கனடாவிற்கு சென்றிருந்தார். எனினும் இதுவரையில் அவருக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படாதநிலையில் 2008ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிலாம் கனடாவின் வன்கூவரிற்குள் பிரவேசித்திருந்தார்.

கனடாவில் புகலிடம் கோரியுள்ள நிலாம் சட்ட ரீதியான வழிமுறைகளைப் பின்பற்றியிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவரை நாடு கடத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *