இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 அம்பன்பொல வாகன விபத்தில் மருத்துவர் அவரது பெறா மகள் சாரதி மூவரும் மரணம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

accident11

மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் அவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஆகிய மூவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற, இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கென்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவி;க்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய பெறாமகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மாகோ வைத்தியசாலையில் பொலிசாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும்  சடலங்களை குருணாகலை வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி சிவநாதன் படுகாயமடைந்து மாகோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு மரணமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாகோ பொலிசார் மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பெண் மருத்துவர் உள்ளிட்ட இரண்டு பேர் வீதி விபத்தில்

பெண் மருத்துவர் உள்ளிட்ட இரண்டு பேர் வீதி விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இரட்டை கப் வண்டியொன்றில் பயணித்து கொண்டிருந்த போது வீதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ட்ரக் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

accident
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 40 வயதான கௌரி நந்தகுமார் என்ற பெண் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஏனைய பெண் யார் என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. அனுராதபுர குருணாகல் வீதியின் மாஹோ பகுதியில் வைத்து இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் உள்ளிட்டவர்கள் பயணித்த  இரட்டை கப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து கொள்கலன் ட்ரக் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *