இந்தியா

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி திருமுகச் சிலைக்கு கின்னஸ் புத்தகம் அங்கீகாரம்


கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 112 அடி உயர ஆதியோகி திருமுகச் சிலை, உலகிலேயே மிகப் பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில், உலகிலேயே மிகப் பெரிய மார்பளவுச் சிலையின் உயரம் 112 அடி என்பதுடன்  அகலம் 81 அடி ஆகவும்  நீளம் 147 அடியாகவுமுள்ளது.  இந்த சாதனையை தமிழகத்தின் ஈஷா அறக்கட்டளை செய்துள்ளதாக  2017ஆம் ஆண்டு  மார்ச் 11ம் திகதியன்று உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாதனையானது  ஈஷா யோகா மையத்துக்குக் கிடைத்துள்ள, 2-வது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கெனவே, ஈஷா அறக்கட்டளை 2006-ம் ஆண்டு ஒக்டோபர் 17ம்திகதி  8லட்சத்து 52ஆயிரத்து 587 மரக்கன்றுகளை நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈஷா யோகா மையம் விதிகளை மீறி வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *