இலங்கை பிரதான செய்திகள்

பிரபாகரனின் படம் பொறித்த சுவரொட்டிகளை ஒட்டிய பெண் கைது

img_1822
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ். மருதனார்மடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் ஜெர்மனியில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த மருனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கண்காணிப்புக் கமெராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து இவர் அடையாளம் காணப்பட்டதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

மருதனார் மடத்தில் உள்ள தங்கும் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். குறித்த சுவரொட்டிகளை ஒட்டியது தான் என கைதான பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார். விசாரணையில் தனது செயற்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படம் மற்றும் தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் கடந்த திட்கட்கிழமை மருதனார் மடத்தில் சில இடங்களில் ஒட்டபப்பட்டிருந்தன. இது தொடர்பில் சுன்னாகம்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *