இலங்கை பிரதான செய்திகள்

2508 இலங்கை அகதிகள் உடனடியாக நாடு திரும்ப விரும்புகின்றனர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இந்தியாவில்  தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் 2508 இலங்கை அகதிகள் உடனடியாக நாடு திரும்ப விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கம் இவர்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வரையில் இவர்கள் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

srilankan-refugee
இவ்வாறு நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளின் பெயர் பட்டியல் ஈழக அகதி புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகர் சந்திரஹாசனினால்  வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறித்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார். இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான போக்குவரத்து செலவுகளை இந்தியா ஏற்றுக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *