இந்தியா பிரதான செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது:-

மோரா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் கொல்கத்தாவுக்கு 950 கிலோ மீட்டருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது மோரா என்ற புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கொல்கத்தாவுக்கு 720 கிலோ மீட்டருக்கு தெற்கு, தென்கிழக்கில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கடும் புயலாக வலுவடைந்து நாளை பங்களாதேஸ் அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் நேற்று பகல் 12.30 மணி அளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதேவேளை பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததுடன், புயல் காரணமாக ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மணிக்கு 50-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியதாகவும் இதன்காரணமாகவே கட்டடங்கள் இடிந்து வீழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply