உலகம் பிரதான செய்திகள்

பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடினைச் சந்தித்துள்ளார்:-


பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடினைச் சந்தித்துள்ளார். பாரிஸ் நகரத்துக்கு வெளியே உள்ள வெர்சைல்ஸ் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்புக்கு பின்னர் அது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்ரன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது எனவும் பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்; உக்ரைன் விவகாரத்தில் சிறிய அளவில் கூட சலுகை காட்ட முடியாது எனவும் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வர தயாராக இருந்தோம் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை சந்தித்தஇரு தினக்களின் பின்னர் மக்ரன் புடினைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *