இலங்கை பிரதான செய்திகள்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனம்

உலக புகைத்தல் எதிர்ப்புத் தினமான இன்று  தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப் படுத்தப்பட்டது.

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து மது, புகைத்தல், பொலித்தீன், மற்றும் விவசாய இராசயனங்கள் ஆகியவையை கட்டுப்படுத்தப்பட்ட சதுக்கமாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியை பிடகடனப் படுத்தியுள்ளன.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலர் , புற்றுநோய் வைத்திய நிபுணர்கள், பிரதேச சபை செயலாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


புகைத்தல் விழிப்புணர்வு வீதி நாடகமும் நடைபெற்றது. அதேவேளை 
எங்கள் வீடு புகை மது வற்ற மகிழ்வான இல்லம் எனும் வாசகம் தெல்லிப்பளையின் சகல வீடுகளிலும் காட்சிப்படுத்தும் செயன்முறையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *