உலகம் பிரதான செய்திகள்

சஹாராவில் தாகத்தினால் 44 பேர் மரணம்


சஹாரா பாலை வனத்தில் தாகம் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். வட நைஜர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நபர்கள் பயணம் செய்த வாகனம் பழுதடைந்த காரணத்தினால், குடிக்க நீர் இன்றி தாகம் காரணமாக 44 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுடன் பயணித்த ஆறு பேர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் அருகாமையில் உள்ள கிராமத்திற்கு அவர்கள் சென்று உதவி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாகம் காரணமாக உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காண இதுவரையில் எவரும் அந்தப் பகுதிக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவினை சென்றடைவதற்கு அநேகமான ஆபிரிக்கர்கள், சஹாரா பாலைவனத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *