இலங்கை பிரதான செய்திகள்

தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்:-

தொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர்.

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால் 17 ஆம் நூற்றாண்டு கால பகுதியில் இக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
எண்கோண வடிவிலான இக் கோட்டை புராதன சின்னமாகும். யுத்த காலத்தில் இக் கோட்டையை கையகப்படுத்திய காரைநகர் கடற்படையினர், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, காரைநகர் கடற்படை தளத்தினுள் பெரியளவிலான உல்லாச உணவு  விடுதி ஒன்றினை அமைத்து அதனுடன் இணைந்து இக் கோட்டை பகுதியினை நவீன உல்லாச தங்குமிட விடுதியாக மாற்றி அமைத்து உள்ளனர்.
குறித்த கடற் கோட்டையில் தங்குவதற்கு உள்நாட்டவருகளுக்கு நாளொன்றுக்கு தனி அறை எனில் 11 ஆயிரத்து 550 ரூபாயும் , காலை உணவுடன் தனி அறை எனில் 13 ஆயிரத்து 750 ரூபாயும் , கோட்டையின் முழு பகுதியும் எனில் 20 ஆயிரத்து 350 ரூபாயும் அறவிடபடுகிறது.
வெளிநாட்டவர்கள் எனில் நாளொன்றுக்கு தனி அறை எனில் 110 அமெரிக்கன் டொலர்ஸ்  , காலை உணவுடன் தனி அறை எனில் 120 அமெரிக்கன் டொலர்ஸ், கோட்டையின் முழு பகுதியும் எனில்198 அமெரிக்கன் டொலர்ஸ் அறவிடப்படுகிறது.
தொல்லியல்  சின்னங்களை பாதுக்கக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு உரியவை. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தல் , அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல் , அதனை உரிமை கோர முடியாது. என்பன தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்.
இந்த நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கடற்கோட்டையினை  கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி தற்போது உல்லாச தங்குமிட விடுதியினை நடாத்தி அதிகளவிலான வருமானத்தை கடற்படையினர் பெறுகின்றனர்.
இது தொடர்பில் தொல்லியல் திணைக்களம், கடற்படையினர் இடமிருந்து கடற்கோட்டையை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமா ?

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *