இலங்கை

மஹிந்தவை மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து மீட்டோம் – மங்கள சமரவீர


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து மீட்டதாக நிதி  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் மின்சார நாற்காலி தண்டனை அனுபவித்திருக்க வேண்டிய மஹிந்தவிற்கு அந்த தண்டனையிலிருந்து தப்பிக்கும் அதிர்ஸ்டம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சியில் நீடித்திருந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவுகளை பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *