இலங்கை விளையாட்டு

விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஓய்வூதியத் திட்டம்


விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு வரும் அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் இவ்வாறு ஓய்வூதியம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளுக்கு மரியாதை செய்யும் வகையில் இவ்வாறு திட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விளையாட்டு வீர வீராங்கனைகள் பதக்கங்களை விற்பனை செய்வதனை தடுப்பதற்கு விசேட சட்டமொன்று கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *