உலகம்

லண்டன் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் உத்தரவு


லண்டனில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் திரேசா மே உத்தரவிட்டுள்ளார். மேற்கு லண்டனின் என்குல்ப்ட் அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 17 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முழு அளவில் பொது விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் தீ துரித கதியில் பரவியமை தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

எதிர்பாராத விதமாக தீ துரித கதியில பரவியதாக மீட்புப் பணியாளர்கள் தம்மிடம் கூறியதாகவும் எனவே இந்த சம்பவம் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்தி காரணங்களை கண்டறிவது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *