உலகம் பிரதான செய்திகள்

பிளந்து கிடந்த ஜேர்மனிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றிய முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் காலம் ஆனார்:-


இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட பனிப்போரால் இரண்டாகப் பிரிந்த ஜெர்மனியை தனது போராட்டத்தால் மீண்டும் இணைத்த ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் 87 வயதில் நேற்றைய தினம் காலமானார்.

இவரது முயற்சியால் சுமார் 44 ஆண்டுகளாக (1945-1989) பிரிந்து இருந்த ஜெர்மனி மீண்டும் இணைந்தது. ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமைக்காக அவர் ஒரு முரட்டுத்தனமான முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது ஆட்சிக் காலத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரண்டாகப் பிரிக்கப்பட்ட பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருநாடுகளும் மீண்டும் ஒன்றாகின. 1982 இலிருந்து 1998 வரையான 16 வருடங்கள் ஜெர்மனியின் வேந்தராக இருந்த ஹெல்முட் கோல் லட்விக்ஷாபனில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *