இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் கருத்துக்கு கோதா மகிழ்ச்சி

gotabaya_ci
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். அண்மையில் படைவீரர் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, கடற்படை தளபதிகள் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். பிந்தியேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யதார்த்தத்தை புரிந்து கொண்டமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள கோதபாய ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சில தரப்பினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எவ்வித இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு ஜனாதிபதி செயற்படுவது வரவேற்கப்பட வேண்டியது எனவும் எதிர்காலத்திலும் இவ்வாறு உறுதியான முடிவுகளை ஜனாதிபதி எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply