இலங்கை

கொழும்பிலிருந்து சென்ற புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் விபத்து – ஒன்றரைமணி நேர தாமதத்தின்பின் பயணம்

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

இன்று திங்கள் கிழமை  அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து  மணியளவில்   கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையத்தில்  இருந்து யாழ்  நோக்கிப் புறப்பட்ட  கடுகதி புகையிரதம்  முறுகண்டிப் பகுதியில் வந்துகொண்டிருந்த  பொழுது  மாடு  ஒன்றுடன் மோதி  விபத்துக்குள்ளானது

இதன்பொழுது  குறித்த மாடு இறந்துள்ளதுடன்  புகையிரதத்தின்  முன்பகுதியில் (டீபவர் ) பகுதியில்  சேதம்  ஏற்ப்பட்டமையால்  புகையிரத்ததை  நகர்த்துவதில்  சிரமம்  ஏற்ப்பட்டிருந்தது

அதனை பின்னர் கிளிநொச்சி  புகையிரத  நிலையத்தில்  புகையிரதம் நிறுத்தப்பட்டு  இலங்கை  புகையிரத சேவைப்  பணியாளர்களினால்  புகையிரதத்தின்   பவர்ரினைக்  கழற்றி சீர் செய்ததன் பின்னர் குறித்த பாகத்தையும்   புகையிரதத்தில் ஏற்றி  தாமதமாக யாழ்நோக்கி  பயணித்தது

முற்ப்பகல்  11.05 இற்கு  கிளிநொச்சி புகையிரத நிலையத்தில்  இருந்து புறப்பட வேண்டிய இவ்  கடுகதி புகையிரதம்  பிற்;பகல்   12.40  புறப்பட்டது  இதனால்  பயணிகள் பெரும்  சிரமங்களுக்கு  உள்ளானதாக  தெரிவித்தனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *