இலங்கை பிரதான செய்திகள்

தற்கொலைகளை செய்தியாக்க வேண்டாம்- விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தற்கொலை சம்பவங்களை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனையோ, செய்தியாக்குவதனையோ தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட காலமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் புகையிரதங்களின் முன்பாக பாய்ந்து, தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

அவ்வாறான சம்பவங்களுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால், தற்கொலைகள் சமூகத்தின் மத்தியில் மேலும் பிரபல்யமடைவதாகவும், பல்வேறு சிக்கல் மற்றும் பிரச்சனைகளினால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அவ்வாறான செய்திகள் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாராவது மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தில் ஆலோசனை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான நிலையங்கள், அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவுகளில் செயற்படுகின்றது. அவ்வாறான நிலையங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்குமாறும், 18 வயதுக்கு குறைவானவர்கள் அவ்வாறான சிக்கலின் போது 1929 என்ற இலக்கத்திற்கு அழைத்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மனோதத்துவ பிரிவின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *