இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண மீன் பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீது புதிய விசாரணை: குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

வடமாகாண மீன் பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாராணை செய்வதற்காக புதிய விசாரணை குழு ஒன்றினை நியமிக்க உள்ளதாக முதலமைச்சர் தெரவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண மீன் பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாராணை செய்வதற்காக புதிய விசாரணை குழு ஒன்றினை மிக விரைவில் நியமிக்க உள்ளேன். குழு நியமிக்கப்பட்டதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டு தொடர்பில் விசாரணை செய்யவென முன்னராக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் தமது பதவி விலக வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. ஏனைய அமைச்சர்களான மீன் பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்களை நிரூபிக்க போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து இருந்தது. அந்நிலையில் முதலமைச்சர் புதிய விசாரணை குழு ஒன்றினை நியமித்து குறித்த இரு அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுகள் தொடர்பில் மீள் விசாரணையை முன்னெடுக்க உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *