இலங்கை பிரதான செய்திகள்

இரணைத்தீவு மக்களின் வீதி மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 54 நாளாக  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
  கடந்த ஐந்தாம் மாதம்    முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர் இப் போராட்டமானது இன்று தீர்வுகள் எவையும் இன்றி  54  நான்காவது நாளை எட்டிய நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  சுமார் நூற்றுக்கு  மேற்ப்பட்ட மக்கள்  இன்று காலை அங்கிருந்து  சுலோகங்களைத் தாங்கியவாறு  பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர்  இவ்வாறு வீதியை மறித்து போராட்டம் செய்வது சட்டத்திற்கு  முரணானது    போக்குவரத்துக்கு தடையாக இருப்பவர்களை  கைது செய்யவும் முடியும்  இப்போராட்டத்தை நிறுத்த தேவையான ஆயுதங்கள் கருவிகள்  நீதிமன்ற உத்தரவு என்பன  எம்மிடம் உள்ளது  நாம்  எதனையும் செய்யவில்லை  எனவே பாதையின் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதிக்காத வகையில்  போராட்டத்தை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்

இதற்கமைய மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் சென்று தங்களுக்கு நியாயமான பதிலை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்து பாதிக்காத வகையில் போராட்டத்தை முன்னெடுத்தனா்.

இந்த நிலையில்   சம்பவ இடத்திற்கு சென்ற  பூநகரி பிரதேச செயலரின்  உறுதி மொழிக்கமைய வீதிமறிப்புப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது
இதன்போது கருத்துத் தெரிவித்த  பூநகரி பிரதேச செயலர் கிருஸ்னேந்திரன்   இரணைதீவு சம்பந்தமாக மேலிடங்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக பலமுறை அறிவித்து உள்ளோம் எதிர்வரும் புதன்கிழமை  எனக்கும் அரசாங்க அதிபரிற்கும் கடற்படையினரிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற உள்ளது அக் கலந்துரையாடலுக்காக இரணைதீவு சம்பந்தப்பட்ட மேலதிக தரவுகளையும் வழங்க உள்ளோம் அதுவரை  ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார் இதற்கமையவே இப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
எனினும்  இரணைதீவு மக்களால்  முன்னெடுக்கப்பட்டுவந்த  தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரும் எனவும் இவ் சந்திப்பில் தமக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கா விடின் போராட்டம் வேறு வடிவத்திற்கு மாறும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *