இலங்கை

அரசியல் சாசனம் குறித்து மீளவும் சுதந்திரக் கட்சிக்கு இடையில் பேச்சுவார்த்தை


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

அரசியல் சாசனம் குறித்து மீளவும் சுதந்திரக் கட்சிக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றைய தினம் இரவு இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி;ன் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

உத்தேச அரசியல் சாசனம் எவ்வாறு அமைய வேண்டுமென இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னதாகவும் அரசியல் சாசனம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது கூட்டு எதிர்க்கட்சியினரும் இணைத்துக் கொள்ளப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *