இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியிலும் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர  நியமனம் வழங்கவில்லை  என வடமாகாணத்தில்  போராட்டங்கள் நடைபெற்று  வரும் நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இன்று செவ்வாய் கிழமை  பிற்பகல் கிளிநொச்சி சுகாதார  தொண்டர்களும் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய தாம் நாளைய தினம் (28) வடமாகாண ஆளுனரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தமக்கு சுமூகமான பதிலை அளிக்காவிட்டால்  தமது கவனயீர்ப்புப் போராட்டம்  தீர்வு கிடைக்கும் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும்  தாம் 1992,1997 களில்  இருந்து பலதரப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் தொண்டர்களாக பணிபுரிவதாகவும் தமக்கான நியமனங்களை  சம்பந்தப் பட்டவர்கள் பெற்றுத் தாருங்கள் எனக் கண்ணீருடன் கோரிக்கையும் விடுக்கின்றனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *