இலங்கை

புதிய நாடுகளுடன் ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்படும் – ரவி கருணாநாயக்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய நாடுகளுடன் ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் வர்த்தக ரீதியான ராஜதந்திர கொள்கை பின்பற்றப்பட உள்ளதாகவும்; தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த தேரரை சந்திக்க சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாடு தொடர்பில் சர்வதேச சமூகத்தில் நிலவி வந்த தப்பான அபிப்பிராயங்களை மாற்றியமைக்க வழியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார சேவைக்கு இளைஞர்களை நியமிக்குமாறு மல்வத்து பீடாதிபதி , வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *