இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் புதிய  கட்டிடத ் தொகுதிகள் இன்று வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்படடுள்ளது.

உயா் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்திய தூதுவா் தரன்ஜித் சிங்கா சண்டு, வட மாகாண  ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்துகொண்டு  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனா்.

இந்திய அரசின்  600 மில்லியன் ரூபா நிதியுதவியில்  பொறியியல் பீடத்திற்கான இயந்திரவியல், உற்பத்தி அலகு, செயல் முறை அலகு ஆகிய கட்டிட தொகுதிகளும், விவசாய பீடத்தில் விளையாட்டு, கணிணி, மற்றும் நூலக கட்டிட தொகுதிகளும் திறந்து வைக்கப்ட்டுள்ளன.இரண்டு  பீடங்களுக்கும் தலா 300 மில்லியன் ரூபா  இந்திய  அரசின் உதவியின் மூலமே இக்கட்டிடத் தொகுதிகள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளினால் அனைத்துலக தமிழ் பல்கலைகழகமாக கட்டப்பட்டு முடிவுறாத நிலையில் காணப்பட்ட சில கட்டங்களை கொண்டிருந்த அறிவியல் நகா் பிரதேசம் 2009 யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னா்  இராணுவ முகாமாக காணப்பட்டது. பின்னா் அது மிகப்பெரும்  இராணுவ பயிற்சி முகாமாக மாற்றபடவிருந்த நிலையில் முன்னைய அரசியல்  அமைச்சராக இருந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமார் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக  இராணுவத்திடம் மீட்கப்பட்டு  யாழ் பல்கலைகழகத்திடம் கையளி்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கதுஃ

இன்றைய இந்த நிகழ்வில்  உயா் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்திய தூதுவா் தரன்ஜித் சிங்கா சண்டு, வட மாகாண  ஆளுநர் றெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினா்களான சிறிதரன் அங்கஜன் இராமநாதன்,  யாழ் இந்திய துணைத்தூதுவா் நடராஜன் , பல்கலைகழக துணைவேந்தர்  விக்கினேஸ்வரன், மற்றும் பீடாதிபதிகள், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா், திணைக்களங்களின் தலைவா்கள் மாணவா்கள்  ஆகியோh் கலந்துகொண்டனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *