இந்தியா பிரதான செய்திகள்

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன:

modi-puttin

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கோவா மாநிலம், பாணாவலி கடற்கரை நகரில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புடினுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன் உணவு, பாதுகாப்பு,  புகையிரதம்  உள்ளிட்ட துறைகள் தொடர்பான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் 39ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான அதிநவீன ஏவுகணை வாங்கும் ஒப்பந்தமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியா – ரஷ்யா இணைந்து 200 கமோவ் ஹெலிகொப்டர்களை தயாரிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மோடி பயங்கரவாத விவகாரத்தில் சகிப்புத் தன்மை கூடாது எனவும்  பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையே ரஷியாவும் கொண்டுள்ளதாகவும் நமது பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான தமது நடவடிக்கையை   ஆதரிப்பதற்கும்,  தமது நிலையை உணர்ந்துள்ளதற்கும் ரஷ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *