இலங்கை பிரதான செய்திகள்

பாலியல் மாத்திரைகளும் யாழ்ப்பணத்திற்கு கடத்தல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடந்த காலங்களில் கேரளாக்கஞ்சா கொண்டு வரப்பட்டு கடற்படையினராலும் பொலிஸாராலும் கைப்பற்றப்படும் நிலையில் தற்போது புதிதாக நேற்றைய தினம் காரைநகர் கடற்பரப்பின் ஊடாகக் கடத்திவரப்பட்ட பாலியல் உணர்வினைத்தூண்டக்கூடிய பல இலட்சம் ரூபா பெறுமதியான 6 வகை போதை மாத்திரைகள் இறுவட்டுக்கள் , போலி நாணயத்தாள்ககள் அச்சடிக்க பயன்படுத்தும் தாள்கள் மற்றும்  31 கிலோ கஞ்சா, என்பன  மீட்கப்பட்டுள்ளன. அவற்றினை கடத்தி வந்த இந்தியாவை சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

1476538597_9095523_hirunews_14619882_10154394855312631_1481746294_n-1

போதை ஒழிப்பு விசேட பொலிஸ் குழுவினால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்தப் பெறுமதி 1 கோடியே 54 இலட்சம் ரூபாவாகும். இதன் போது கஞ்சாவினை கடத்தி வந்த படகும் இதற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சாவினை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகலையடுத்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 4.25 மணியளவில் மாதகவல் சேத்தான்குளம் பகுதியில் பொலிஸார் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சேந்தான்குளம் பகுதியில் வந்த படகு ஒன்றினை முற்றுகையிட்டி சோதனை நடத்திய வேளை அதில் கஞ்சாப் பொதிகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்னர்.

இதன் போது படகில் வந்த மூவர் கைதுசெய்யப்பட்டுளனர். ஒருவர் தென்னிந்தியாவை சேர்த்தவர் எனவும், மற்றைய இருவரில்   ஒருவர் சேந்தான் குள பகுதியை சேர்ந்தவர்  மற்றையவர்  மன்னாரை சேர்ந்தவர் என இனங்காணப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட மூவரும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் மல்லாகம் நீதிமன்ற நிதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.

0-02-06-890e8e96476766cec36c60163f2599ce08ac91cebfdfc90bdf16ddf9ba831146_full

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *