இலங்கை பிரதான செய்திகள்

வலிவடக்குப் பிரதேசநிர்வாகம் மீதுபொதுமக்கள் அதிருப்தி அளவெட்டிகிராமியச் செயலக ஆண்டுவிழாவில் மக்கள் பிரதிநிதிகள் உரை:-

not-satisfied

அளவெட்டி வடக்குகிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவுநிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இந் நிகழ்வுக்கு வலிவடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேசசெயலர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அழைப்பிதழில் அவர்களது சம்மதத்துடன் அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளாமை பொதுமக்களை விசனத்துக்கு உள்ளாக்கியது. பிரதேசசெயலரின் அறிவுறுத்தலுக்கு அமையவே அவர்கள் கலந்துகொள்ளவில்லை என பின்னர் அறியக்கூடியதாக இருந்தது.
ஐநூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் வறுமைக்கு கோட்டுக்குட்பட்ட 30 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 300 மாணவர்களுக்கு காலணிகளும் முதியவர்களுக்கு போர்வைகள் உள்ளிட்ட உடுபுடவைகளும் இரண்டு பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு பசுமாடுகளும் வழங்கிவைக்கப்பட்டன. அளவெட்டியைச் சேர்ந்தபுலம்பெயர் மக்கள் மற்றும் அளவெட்டி அபிவிருத்திமன்றத்தின் நிதியுதவியுடனேயே இவ் உதவிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் உரையாற்றிய அளவெட்டிக் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொள்ள தனிப்பட்ட சிலகாரணங்களுக்காக பிரதேசசெயலர் மறுப்புத் தெரிவித்தமையையும் ஏனைய அதிகாரிகளை கலந்துகொள்ளவிடாது தடுத்தமையையும் சுட்டிக் காட்டி தமது அதிருப்தியை வெளியிட்டு உரையாற்றினர். கிராமசேவையாளர்களின் பணிகளுக்கு ஊக்கம் கொடுத்து தட்டிக் கொடுக்க வேண்டிய உயர் அதிகாரிகள் அத்தகைய பணிகளுக்கு முட்டுக்கட்டையாகவிருப்பது கவலையளிப்பதாக உள்ளதாக பலரும் கருத்துவெளியிட்டனர்.
வலிவடக்குப் பிரதேசசெயலரை இடமாற்றக் கோரி பொது அமைப்புக்கள் சில அரச அதிபரிடம் கோரி;க்கை விடுத்துள்ள நிலையியே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்தது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *