இலங்கை பிரதான செய்திகள்

வளை ஓசை நாதம் ஏழுக்கான ஆக்கங்கள் கோரல்:-

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேச கலாசார பேரவையால் வருடந்தோறும் வெளியிடப்படும் “ வளை ஓசை ” ஆண்டிதழுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. வளை ஓசை இவ்வாண்டும் நாதம் – 7 ஆக வெளிவர இருக்கின்றது.

மேற்படி கலாசார பேரவையால் 2011 ம் ஆண்டு முதல் பிரதேசத்தின் கலை கலாசாரம் வாழ்வியல் ஆன்மிகம் மரபுரிமைகள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் வளை ஓசை நூல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்நூலுக்கான ஆக்கங்கள் கண்டாவளை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மாணவர்கள் கண்டாவளையில் பணிநிமித்தம் கடமையாற்றும் கல்விப்புலம் சார்ந்தவர்கள் மற்றும் கண்டாவளை பிரதேசத்தில் வசித்த வசித்துவருகின்ற படைப்பாளிகளிடமிருந்து பிரதேசத்தின் கலை கலாசாரம் வாழ்வியல் தொன்மைகள்ரூபவ் நாட்டுப்புறவியல்ரூபவ் ஆன்மீகம்ரூபவ் மரபுரிமைகள் போன்ற விடயங்களை பிரதிபலிக்கும் வகையிலான கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் ஆவணத்தரவுகள் விமர்சனங்கள் மற்றும் பிரதேசத்திற்கென தனித்துவம் மிக்க நாட்டுப்புறவியல் போன்ற எழுத்தாக்கங்களை வெளிக்கொணரக்கூடிய வகையில் இந் நூலில் வெளியிடவுள்ளமையால் இவை சார்ந்த ஆக்கங்களை

இம் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் “ தலைவர் பிரதேசகலாசார பேரவை பிரதேச செயலகம்ரூபவ் கண்டாவளை” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அவற்றில் தரமானவற்றை மலர்குழுவின் பரிந்துரையுடன் மலரில் பிரசுரிக்கப்படும் என கண்டாவளை பிரதேச செயலக கலாச்சார பேரவை அறிவித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *