இலங்கை பிரதான செய்திகள்

மாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு நடத்த உள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். மூன்று பீடங்களினதும் மாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி நாளைய தினம் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த உள்ளார்.

கண்டி அஸ்கிரி விஹாரையில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது. உத்தேச அரசியல் சாசனம் மற்றும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி, மாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக நேற்றைய தினம் மாநாயக்க தேரர்கள் தங்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *