இலங்கை பிரதான செய்திகள்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமல்ல – கர்தினால்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமல்ல என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் தற்போது தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாடு முழுவதிலும் டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் நடத்துவது உசிதமானதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கினால் ஆயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கப் போராட்டங்களின் ஊடாக தங்களது உரிமைகளை வென்றெடுக்க மருத்துவர்களுக்கு பூரண உரிமை உண்டு என சுட்டிக்காட்டியுள்ள அவர் எனினும், நாட்டின் காலச்சூழ்நிலையை புரிந்து கொண்டே போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனவே கால வரையறையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கைவிட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *