உலகம் பிரதான செய்திகள்

கட்டாருக்கு மேலும் இரண்டு நாள் கால அவகாசம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாருக்கு சவூதிஅரேபியா உள்ளிட்ட நாடுகள் மேலும் இரண்டு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளன.

தமது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கட்டாரிடம் கோரியுள்ளன. தீவிரவாத செயற்பாடுகளுக்கு கட்டார் ஆதரவளிப்பதாகத் தெரிவித்து சவூதி உள்ளிட்ட அண்டை அரபு நாடுகள் கட்டாருனடான உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளன. எனினும் தாம் அவ்வாறு எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என கட்டார் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் அல் ஜசீரா தொலைக்காட்சி சேவையை முடக்குதல் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை கட்டார் மீது விதி;த்துள்ளன.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளத் தவறினால் மேலும் தடைகள் கட்டார் மீது விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக சவூதிஅரேபியா தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *