உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக தண்டனை விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவில் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக தண்டனை விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. 2014ம் ஆண்டின் பின்னர் சிரியா, ஈராக்கிய ஆகிய நாடுகளில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக  பெண்கள் மற்றும் சிறுமிகளும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் வழக்குத் தொடரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கைதிகள், காவல்துறை அதிகாரியின் புதல்வர், மருத்துவ நிலையமொன்றின் பணிப்பாளர் உள்ளிட்டவர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *