உலகம்

பிரான்சில் எதிர்வரும் 2040 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக எதிர்வரும்  2040 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை வெளியிட்டுள்ள  அந்நாட்டின் சூழலியல் துறை  அமைச்சர்  நிக்கோலஸ் இந்த முடிவு ஒரு புரட்சியாக அமையும்  எனத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாட்டு ஒப்பந்தத்தின் படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022ஆம் ஆண்டுக்குள் மூடுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டுக்குள் அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும்  எனவும் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மின்சாரத்தை 50 சதவிகிதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், இதனால், 2050 ஆண்டில் பிரான்ஸ் முற்றிலும் மரபு சாரா எரிசக்திக்கு மாறிவிடும் எனவும் அவர்   தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *