இலங்கை பிரதான செய்திகள்

யுத்தகுற்ற விசாரணை தொடர்பில் ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி மீண்டும் எதிர்ப்பு

maithri
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் உள்நாட்டுபோரின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கியநாடுகள் பேரவையின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி சிறிசேன மீண்டும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஈராக்கில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட பிரித்தானிய  படையினரிற்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரித்தானிய  பிரதமர் எடுத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி சிறிசேன தானும் இது போன்று இலங்கை படையினரிற்கு ஆதரவான  நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்பொதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யுத்தகுற்ற விசாரணை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி பிரித்தானிய  பிரதமர் தெரசாமேயின் கருத்தொன்றை உதாரணம் காட்டி யுத்தகுற்ற விசாரணைகளை நிராகரித்தார். ஈராக்கிய மக்கள் சார்பு  வழக்கறிஞர் குழுவொன்றினால் பிரித்தானியாவின் படைவீரர்கள்  அவமானத்திற்கு உட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு  பிரித்தானிய  பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டிய சிறிசேன ஐக்கியநாடுகள்  இலங்கைக்கு ஓரு நிலைப்பாட்டையும், ஏனைய நாடுகளிற்கு வேறுநிலைப்பாட்டையும் கடைப்பிடிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் பொதுவான ஓருநிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் என தெரிவித்து உலக தலைவர்களிற்கு தான்கடிதங்களை அனுப்பிவைக்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். சிறிசேன தான் பிரித்தானிய  பிரதமரை பின்பற்றப்போவதாக தெரிவித்ததுடன் வெளிவிவகார அமைச்சர் பக்கம் திரும்பி தான் சொல்வதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பாதுகாப்புபடையினரின் வெற்றியையும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியையும் சீர் குலைக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவரின் இந்த கருத்துக்கள் சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட் தீர்மானத்திலிருந்து விலகிச்செல்கின்றார் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படை தளபதிகள் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்களிற்கு எதிரானது பலவீனமான வழக்கு எனவும் அது வெற்றிபெறாது எனவும்  மாறாக குற்றவியல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.  மேலும் அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் கடற்படை தளபதிகளும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட விதம்குறித்து கடும் கோபத்தை வெளியிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply