இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக  ரோஹித போகொல்லாகம, திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்றையதினம்  உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த  பதவியேற்பு வைபவத்தில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உள்ளிட்ட கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்,

அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  கிழக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கை கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக் தெரிவித்தார்.

கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளாக அடையாளங்காணப்பட்டுள்ள வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஆளுநருடன் இணைந்து தமது திட்டங்களை வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *