விளையாட்டு

தலைமைப் பயிற்சியாளராக யாரும் நியமிக்கப்படவில்லை -இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை

2019 உலகக்கோப்பை வரை ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை  திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பில் கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை என    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்  பொறுப்புச் செயலர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புதிய பயிற்சியாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை எனவும் கிரிக்கெட் நிர்வாகக் குழு இன்னும் பரிசீலனைதான் செய்து வருகிறது எனவும் இது குறித்து வெளியான செய்திகளில் உண்மையில்லை  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ; சில ஊடகங்கள் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *