இலங்கை பிரதான செய்திகள்

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை புதுப்பிக்கப்பட உள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை புதுப்பிக்கப்பட உள்ளது. இரு நாடுகளும் பாதுகாப்பு உறவுகள் குறித்த உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்ள இணங்கியுள்ளதாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சிற்கும், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.  இந்தநிலையில் பத்தாண்டு கால உடன்படிக்கை காலாவதியாகிய நிலையில் தற்போது மீளவும் அந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்பட உள்ளது.

விரைவில் இரு நாடுகளும் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *