உலகம் பிரதான செய்திகள்

இங்கிலாந்தில் கட்டடங்கள் குறித்த சட்டங்களில் மாற்றம் – குளோபல் தமிழ்ச செய்தியாளர்:-

இங்கிலாந்தில் கட்டங்கள் தொடர்பில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டடங்களை அமைத்தல் பராமரித்தல் தொடர்பிலான விடயங்களில் பாரியளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லண்டனில் அண்மையில் க்ரென்பெல் கட்டடம் தீ விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இந்த தீ விபத்துச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 80 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டடங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் இனி வரும் காலங்களில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கட்டங்களை பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் லண்டன் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் புதிய யோசனைகளை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *