இலங்கை பிரதான செய்திகள்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் தற்காலிகமாக முடிவு


பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 143 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமது போராட்டத்தை தற்காலிகமாக முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக மத்திய அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்றினை கொண்டுவந்துள்ளது.

இதனால்    143 நாட்களாக யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் நடாத்தப்பட்ட தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வருவதாக    அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமக்கு  ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதற்கு அரசாங்கத்துக்கு  இரண்டு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதற்குள் தமக்குரிய தீர்வு கிடைக்காதவிடத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும்  போரட்டம் மேற்கொண்ட    வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *